ஐஸ்வர்யாவின் அந்தஸ்து பறிப்பு?

2004-ம் ஆண்டிலிருந்து நக்ஷத்ரா வைரங்களுக்கு மாடலாகவும், விளம்பரத் தூதராகவும் இருக்கிறார் முன்னாள் உலக அழகியும் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யாராய்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்குப் பதில் நக்ஷத்திரா விளம்பரங்களில் கத்ரீனா கைஃப் தோன்றுகிறார்.
ஐஸ்வர்யா நீக்கப்பட்டு அவருக்குப் பதில் கத்ரீனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வர ஆரம்பித்தன. இதனை மறுத்துள்ளார் ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக்.
விளம்பர ஒப்பந்தங்கள் ஒன்றும் விளையாட்டுப் போட்டிகளல்ல, ஒருவர் வெற்றி பெறுவதற்கும், தோற்பதற்கும்.
ஐஸ்வர்யாவின் சில நிபந்தனைகளை அந்த நிறுவனம் ஏற்கவில்லை. அவர்கள் போட்ட சில நிபந்தனைகள் எங்களுக்கு ஒத்து வரவில்லை. அவ்வளவுதான்... என்கிறார் அபிஷேக்.
ஐஸ்வர்யாவை ஓவர்டேக் செய்வது கத்ரீனாவுக்கு இது முதல்முறையல்ல. இதற்கு முன் இந்தியாவிலேயே இணைய தளங்களில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் நடிகையாக இருந்த ஐஸ்வர்யா, சில மாதங்களுக்கு முன்புதான் அந்தப் பெருமை கத்ரீனாவிடம் பறிகொடுத்தார்.


Click it and Unblock the Notifications











