புத்தரின் மனைவியாக ஐஸ்வர்யா!

ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாகும் புத்தாவில், ஐஸ்வர்யா ராய், சித்தார்த்தனின் மனைவி யசோதரா வேடத்தில் நடிக்கவுள்ளார். பாரீஸைச் சேர்ந்த இந்திய இயக்குநர் பான் நளின் இப்படத்ைத இயக்கவுள்ளார்.
ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பையும், இதுபோன்ற கேரக்டர்களில் அவர் அட்டகாசமாக பொருந்துவதாலும், புத்தர் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.
இந்தியாவில் பிறந்த இளவரசர் சித்தார்த்தன் பின்னர் உலக வாழ்க்கையைத் துறந்து, நிர்வாணம் பெற்று, உலகம் போற்றும் கெளதம புத்தராக மாறினார்.
புத்தரின் கொள்கைகள் மதமாக மாறி இன்று பெளத்த மதம் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இயக்குநர் நளின் ஏற்கனவே சம்சாரா என்ற படத்தில் புத்தரின் மனமாற்றத்தை கருத்தாக வைத்துப் படம் எடுத்தவர். இந்தப் படத்தில் லடாக், இந்திய, அமெரிக்க, சீன நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். இப்படம் சர்வதேச அளவில் 30 விருதுகளை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் 2006ம் ஆண்டு திரைக்கு வந்தது. சோனி நிறுவனம் இந்தியாவில் இதை திரையிட்டது.
அதன் தொடர்ச்சியாக தி வேலி ஆப் பிளவர்ஸ் என்ற படத்தையும் அவர் இயக்கினார். இப்போது புத்தரின் வாழ்க்கையைப் படமாக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யாவை அணுகியுள்ளாராம் நளின். இருப்பினும் அவர் உறுதியாக இதுவரை சொல்லவில்லையாம். இருப்பினும் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று நளின் நம்பிக்கையுடன் கூறுகிறார். அவர் ஓ.கே. சொன்ன பின்னர் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் நளின்.


Click it and Unblock the Notifications











