பானுவின் 'பெரிய' ஆசை!

'தாமிரபரணி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், பானு. கேரளாவைச் சேர்ந்தவர். மலையாளப் படங்களில் முக்தா என்ற பெயரில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இப்போது ஆர்கே வுக்கு ஜோடியாத 'அழகர்மலை' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்துக்காக சென்னை வந்த அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தாமிரபரணி படத்துக்குப் பிறகு தொடர்ந்து நான் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. வாய்ப்புகள் நிறையவே வந்தன. ஆனால் வந்த படங்களில் எல்லாம் கவர்ச்சியாக நடிக்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்து விட்டேன். மலையாள படங்களில் நல்ல வாய்ப்புகள் வந்ததால், அங்கே நிறைய படங்களை ஒப்புக்கொண்டேன்.
அதனால் தமிழில், ஒரு இடைவெளி விழுந்து விட்டது. குறிப்பிட்ட ஒரு ஹீரோதான் என்று இல்லாமல், பெரிய கதாநாயகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.
நான் ஒன்றும் ரொம்ப குள்ளமெல்லாம் இல்லை... இந்த உயரம் என்பது ஒரு பிரச்சினையே அல்ல. உயரமான கதாநாயகர்களுடன் நடிக்கும்போது, இருக்கவே இருக்கிறது ஸ்டூல்.
என் காதல் பற்றி பெரிதாக நீங்கள் பேசும் அளவுக்கு ஒன்றுமில்லை. காதல் யாருக்குத்தான் வரவில்லை? வயது வந்த அத்தனை பேருக்குள்ளும் காதல் வந்து இருக்கும். அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. எனக்கும் காதல் வந்து இருக்கிறது. என் காதலர் யார்? என்பதை சொல்ல மாட்டேன்!, என்றார் பானு.


Click it and Unblock the Notifications











