''பாவனா ரசிகர் மன்றம்''!!

By Staff

Bhavana
திரிஷா, நமீதாவைத் தொடர்ந்து பாவனாவுக்கும் ரசிகர் மன்றம் பிறந்துள்ளது. தனது பிறந்த நான்று ரசிகர் மன்ற செயல்பாட்டை முறைப்படி ஆரம்பித்து, குட்டையைக் குழப்ப, அதாவது பட்டையைக் கிளப்ப வருகிறார் பாவனா.

கடந்த 75 ஆண்டு கால தமிழ்த் திரைக் களம் பல ரசிகர் மன்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் அத்தனையும் நடிகர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டவை. அதேசமயம், சில நடிகையர்களுக்கும் இதுபோன்ற பரவச பாப்புலாரிட்டி கிடைத்ததுண்டு.

கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி, நாட்டியப் பேரொளி பத்மினி, புன்னகை அரசி கே.ஆர்.விஜயா ஆகியோருக்கு அந்தக் காலத்தில் ஏகப்பட்ட மவுசும், ரசிக செல்வாக்கும் இருந்தது. ஆனால் யாருமே ரசிகர் மன்றம் ஆரம்பித்ததில்லை. ரசிகர்களின் மன மன்றத்தில் மட்டுமே இடம் பிடித்திருந்தனர்.

ஆனால் குஷ்பு காலத்திலிருந்து இது மாறியது. குஷ்புவைப் பார்த்து புளகாங்கிதப்பட்ட ரசிகர்கள் அவர் மீது பயங்கர கிரேஸாக இருந்த காலம் அது. திருச்சிப் பக்கத்தில் உள்ள சில தீவிர ரசிகர்கள், குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி அல்லோகல்லப்படுத்தினர். அது ஒரு கனாக் காலம்!

ஆனால் அதே ரசிகர்கள்தான் கொஞ்ச காலத்திற்கு முன்பு குஷ்பு படத்தை செருப்பால் அடித்து போராட்டமும் நடத்தினார்கள் என்பது வேறு கதை. அது குஷ்பு கனவாக நினைத்து மறக்க வேண்டிய காலம்.

சமீபத்தில் திரிஷாவுக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. கூடவே தென்னிந்திய தேவதை என்ற செல்லப் பட்டப் பெயரையும் கொடுத்தார்கள் ரசிகர்கள். அவரைத் தொடர்ந்து நமீதாவும் ரசிகர் மன்றம் ஆரம்பித்தார். நயனதாராவுக்கும் ரசிகர் மன்றம் உள்ளது.

திரிஷாவுக்கும், நயனதாராவுக்கும் ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர் மன்றங்களாம். அங்குள்ள ஹீரோக்களுக்கு இணையாக இவர்களுக்கும் ரசிகர் மன்றங்கள் உள்ளதாம்.

இப்போது இந்த 'எலைட் கிளப்'பில் பாவனாவும் இணைந்துள்ளார். மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பாவனாவின் தீவிர ரசிகர்கள் இணைந்து 'நவரச நாயகி பாவனா ரசிகர் மன்றம்' என்ற பெயரில் மன்றம் தொடங்கியுள்ளனர்.

ரசிகர் மன்றத்தின் பெயருடன் மாவட்டங்களில் ஆங்காங்கு போர்டுகளையும் வைத்து கிளப்பி வருகின்றனராம். ரசிகர் மன்றம் சார்பில் பாவனாவின் பிறந்த நாளன்று, இலவச பாட நூல்கள், இலவச உடைகளை வழங்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட பாவனா, ரசிகர் மன்ற முயற்சிகளுக்கு பிரேக் போட முயற்சித்தாராம். ஆனால் அவரது பி.ஆர்.ஓ. இடையில் புகுந்து தடுத்து விட்டாராம். இதெல்லாம் நடந்தால் அது உங்களுக்குத்தான் நல்லது. சமூக சேவையில் உங்களுக்கு அக்கறை உள்ளது என்று எல்லோருக்கும் தெரிய வரும் என்று அட்வைஸ் செய்தாராம்.

இதைக் கேட்டதும் பாவனாவும், ரசிகர்களின் வேகத்திற்குத் தடை போடாமல் விட்டு விட முடிவு செய்தாராம். அதற்கும் ஒரு படி மேலே போய், ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, அவற்றின் நடவடிக்கைகளை முறைப்படுத்தவும் அவர் முயன்று வருகிறாராம்.

ஜூன் 6ம் தேதி பாவனாவின் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் தனது ரசிகர் மன்ற செயல்பாடு குறித்து முறைப்படி அறிவிக்கப் போகிறாராம் பாவனா.

''டாக்டர்' பாவனா வாழ்க''!
''வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பாவனா வாழ்க''!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X