நியூஜெர்சியில் 'சிக்கிய' ஸ்னேகா!

பாண்டியில், லாரன்ஸுடன் கிளாமர் ஆட்டம், குத்துப்பாட்டு என கலக்கிய ஸ்அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் ஷூட்டிங்குக்காக அமெரிக்காவுக்குப் போயுள்ளார்.
நியூஜெர்சியில் தற்போது ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த நிலையில், தான் தெலுங்கில் நடித்த பாண்டுரங்கா என்ற படம், தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருப்பதை அறிந்தார் ஸ்னேகா. இது ஒரு பக்திப் படம். சினேகாவுடன் நடித்திருப்பவர் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா.
ரசிகர்களுடன் ரசிகராக உட்கார்ந்து படம் பார்க்க விரும்பினார் ஸ்னேகா. இதையடுத்து தியேட்டருக்கு விரைந்தார். அங்கு யாருக்கும் தெரியாமல் உட்கார்ந்து படத்தையும், அதை ரசிக்கும் ரசிகர்களையும் பார்த்து மகிழ்ந்தார்.
இந் நிலையில், ஸ்னேகா வந்திருப்பதை ரசிகர்கள் அறிந்தனர். இதையடுத்து அங்கு ரசிகர்கள் திரண்டு விட்டனர். ஸ்னேகாவின் கையைப் பிடித்துக் குலுக்கி மகிழ்ந்தனர். ஆட்டோகிராப் பெற்றனர்.
ஒரு கட்டத்தில், தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிடவே படாதபாடுபட்டு ரசிகர்களிடமிருந்து மீண்ட ஸ்னேகா காரில் ஏறி ஹோட்டலுக்குப் பறந்தாராம்.


Click it and Unblock the Notifications











