'இந்திர விழா'வில் இருக்கிறேன்-மாளவிகா

By Staff

Malavika
இந்திர விழா படத்திலிருந்து நான் விலகவில்லை. தற்போது கர்ப்பமாக இருப்பதால் 3 மாதம் கழித்து அப்படத்திற்காக ஒரு பாடலுக்கு ஆடிக் கொடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார் மாளவிகா.

திருமணத்திற்கு முன்பு நடித்ததைப் போலவே திருமணத்திற்குப் பிறகும் கிளாமராக நடித்து வருகிறார் மாளவிகா. அவர் சமீபத்தில் ஒப்பந்தமாகியிருந்த படம் ஸ்ரீகாந்த் நடிக்க, ராஜேஷ்வர் இயக்கத்தில் உருவாகும் இந்திர விழா.

இப்படத்தின் நாயகி நமீதா. இருந்தாலும் மாளவிகாவையும் கூடுதல் கிளாமருக்காக படத்தில் சேர்த்திருந்தார் ராஜேஷ்வர். ஒரு பாடலில் படு கிளாமராகவும் ஆடுகிறார் மாளவிகா.

இந்த நிலையில் கர்ப்பம் தரித்து விட்டதால் படத்திலிருந்து மாளவிகா விலகிக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கிறார் மாளவிகா.

நான் படத்திலிருந்து விலகி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மை இல்லை. வதந்தி அது. உண்மையில், நான் கர்ப்பம் தரித்துள்ளதால், 3 மாதங்களுக்கு டான்ஸ் ஆடக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளேன்.

இதுகுறித்து இயக்குநர் ராஜேஷ்வருடன் நான் பேசினேன். அதற்கு அவர் பரவாயில்லை, நீங்கள்தான் அந்த நடனத்தை ஆடுகிறீர்கள். எப்போது உங்களுக்கு வசதியாக இருக்கிறதோ வந்து ஆடிக் கொடுங்கள், அதுவரை காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதுதான் உண்மை. மற்றபடி நான் படத்திலிருந்து விலகவில்லை என்கிறார் மாளவிகா.

சிங்கக்குட்டி படத்தில் தான் ஆடிய நடனத்திற்கும், கட்டுவிரியன் படத்தில் தனது நடிப்புக்கும் செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளதால் குஷியாகியுள்ளாராம் மாளவிகா. தொடர்ந்து இதே பாதையில் நடைபோடவும் முடிவு செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X