'வெரைட்டி' கேட்கும் மினிஷா!

By Staff

Minissha Lamba
ஒரே மாதிரியான கேரக்டர்களாக இல்லாமல், வெர்சடைலான, வெரைட்டியான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பாலிவுட் புதுப் புயல் மினிஷா லம்பா கூறுகிறார்.

மினிஷா லம்பா - பாலிவுட்டில் தரையிறங்கியுள்ள இளம் மின்னல். யாஹான் படத்தில் காஷ்மீர் பெண்ணாக வந்து, பச்னா ஏ ஹஸீனா-வில் காதல் நோயால் பீடிக்கப்பட்ட இளம் பெண்ணாக கலக்கியவர். அடுத்து அவர் கலக்கியுள்ள கிட்நாப் வெளியாகவுள்ளது.

இளம் நாயகன் இம்ரான் கானுடன் இணைந்து நடித்துள்ளார் இப்படத்தில். இப்படத்தில் மினிஷாவின் தந்தையாக வருகிறார் சஞ்சய் தத்.

படு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண்ணாக இப்படத்தில் வருகிறார் மினிஷா. ஆனால் திடீரென ஒரு நாள் மினிஷா கடத்தப்பட்டு விடுகிறார். அதன் பிறகு அவரது வாழ்க்கை சேனலே மாறிப் போய் விடுகிறது.

கிட்நாப் குறித்து மினிஷா கண்களில் மின்னல் மின்ன ஆர்வமாக பேசுகிறார். இப்படத்தில் இம்ரான் கானுடன் இணைந்து நடித்தது வித்தியாசமான அனுபவம்.

இம்ரான் கான் பழக இனிமையானவர். மிகவும் அன்பாக பழகுவார். இந்த படம் உருவாவதற்கு மிகப் பெரிய பலமாக அவர் இருந்துள்ளார். சஞ்சய் தத்துடன் அதிக காட்சிகள் இல்லை என்றாலும் அவருடன் நடித்தபோது நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அவர் ஒரு முழுமையான நடிகர் என்று பாராட்டித் தள்ளுகிறார்.

மினிஷாவுக்கு விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதாம். ஒவ்வொரு படத்திலும் நான் கையெழுத்திடும்போதும், அது வித்தியாசமான கேரக்டரா என்பதை பார்த்துக்கொள்கிறேன். ஒவ்வொரு கேரக்டரிலும் புதுமை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதுவரை அப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் கிடைத்துள்ளன என்கிறார் மினிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X