'வெயிட்டா வேணும்' - கல்கி

தேவி-டி படத்தில் பள்ளி மாணவி ஒருவர் விபச்சாரப் பெண்ணாக மாறும் கேரக்டரில் நடித்துப் பரபரப்பூட்டியவர் கல்கி கோச்லின். முதல் படத்திலேயே பரபரப்பான ரோலில் நடித்த கல்கி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெயரில் கல்கி என்று இருந்தாலும், உண்மையில், பிரெஞ்சு தாய், தந்தைக்குப் பிறந்தவர் கல்கி. 38 வருடங்களுக்கு முன்பு கல்கியின் பெற்றோர் இந்தியாவுக்கு வந்து பெங்களூரில் செட்டிலானார்கள். தற்போது பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் மும்பைக்கு ஷிப்ட் ஆகி விட்டார்.
கல்கிவிக்கு பிரெஞ்சு தவிர தமிழும் அபாரமாக பேசத் தெரியுமாம். தற்போது ஆங்கிலத்தின் துணையுடன் மும்பையைக் கலக்க களம் இறங்கியுள்ளார்.
முதல் படத்திலேயே விபச்சாரம் செய்யும் பெண்ணாக நடித்ததற்காக வருத்தப்படவில்லையாம். மாறாக அது சவாலானது, அதை நான் துணிவோடு ஏற்று நடித்ததையே பெருமையாக கருதுகிறேன் என்கிறார் கல்வி.
மேலும், சாதாரண ரோல்களில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்கிறார்.
இதுகுறித்து கல்கி கூறுகையில், பாண்டிட் க்வீன் படத்தில் சீமா நடித்தது போல, சோனியா காந்தி கேரக்டர் என பரபரப்பான, கனமான கதாபாத்திரங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். சாதாரணமாக வந்து போவதை நான் விரும்பவில்லை.
டீன் ஏஜ் கேர்ள் கேரக்டரில் நடிப்பதை யாருமே இப்போது விரும்புவதில்லை. நடிக்க நல்ல வாய்ப்பு இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகின்றனர். ரசிகர்களும் நடிகைகளிடம் கவர்ச்சியைத் தவிர நடிப்பையும் எதிர்பார்க்கிறார்கள்.
எனது இளமையான முகம், 18 வயதுக்குக் கீழ்தான் எனது வயதைக் கணிக்கத் தோன்றும். ஆனால் உண்மையில் எனக்கு 25 வயதாகிறது. இதனால்தான் எனக்கு சாதாரணமான, கவர்ச்சிகரமான கேரக்டர்கள் கொடுக்க இயக்குநர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை என்கிறார் கல்கி.
அடுத்து ஐ ஆம் அபியா என்ற படத்தில் நடிக்கிறார் கல்கி. அதில் என்.ஜி.ஓ. ஊழியையாக வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











