குஷியில் கஜாலா - சோகத்தில் கீரத்!

By Staff

Keerath
துரை படத்தில் தனது கேரக்டரை விட கஜாலாவின் கேரக்டர் விரிவுபடுத்தப்பட்டுள்ளால் அப்செட் ஆகியுள்ளாராம் கீரத்.

சரனின் வட்டாரம் படத்தில் நாயகியாக நடித்தவர் கீரத். அதன் பிறகு 'காணாமல் போனோர்' பட்டியலில் சேர்ந்து விட்டார். இந்த நிலையில்தான் எதிர்பாராதவிதமாக அர்ஜூன் நடிக்கும் துரை பட நாயகி வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.

முதலில் நாயகியாக பேசப்பட்டவர் பத்மப்ரியா. ஒப்பந்தமும் ஆகி நடிக்கவும் ஆரம்பித்த நிலையில் திடீரென பத்மப்ரியாவை தூக்கி விட்டனர். கவர்ச்சிகரமாக நடிக்க வேண்டும் என்று பத்மப்ரியாவிடம் கூறவே, அதற்கு அவர் மறுத்து விட்டார். மேலும், ஏகப்பட்ட கன்டிஷன்களையும் அடுக்கினார். இதனால் அவரைத் தூக்கி விட்டு கீரத்தை புக் செய்து விட்டனர்.

தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்று சந்தோஷமாக நடிக்க ஆரம்பித்தார் கீரத்தும். ஆனால் இப்போது திடீரென கஜாலாவை இன்னொரு நாயகியாக போட்டுள்ளனர். இது அர்ஜூனின் பரிந்துரையின் பேரில் நடந்துள்ளதாம்.

கஜாலாவை 2வது நாயகியாகத்தான் முதலில் புக் செய்தனர். ஆனால் இப்போது கிட்டத்தட்ட படத்தின் பிரதான நாயகி என்று சொல்லும் அளவுக்கு கஜாலாவின் கேரக்டரை பெரிதாக்கி விட்டார்களாம். கீரத் கேரக்டர் சுருங்கி விட்டதாம்.

இந்த செயலால் அப்செட் ஆகியுள்ளாராம் கீரத். இது நியாயமா என்று இயக்குநரிடமும், அர்ஜூனிடமும் தனித் தனியாக புலம்பியுள்ளாராம்.

இந்த நிலையில் வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றுவது போல கீரத்தை விட படு கவர்ச்சிகரமாக ஒரு குத்துப் பாட்டுக்கு மும்பையிலிருந்து ஒரு டான்ஸரைக் கூப்பிட்டு வந்து குத்துப் பாட்டையும் படத்தில் சேர்த்துள்ளனராம்.

என்ன தவறு செய்தேன் வேந்தே என்ற ரேஞ்சில் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கீரத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X