கவர்ச்சி மீனாள்!

சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் அவரது அண்ணியாக நடித்தவர்தான் மீனாள். முதல் படத்திலேயே நடிப்பால் கவர்ந்த மீனாள், அடுத்தடுத்து படங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு பொய்யானது.
இதனால் சில காலம் அமைதியாக இருந்த மீனாள் இப்போது திடீரென கவர்ச்சிக் களத்தில் குதித்துள்ளார். சொன்னது நீதானா என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு மீனாளுக்குக் கிடைத்துள்ளது.
ஆனால் இது அடக்கம் ஒடுக்கமான கேரக்டர் இல்லையாம். நல்ல கவர்ச்சி காட்டி நடிக்கும் கேர்கடர். இதற்காக முதலிலேயே மீனாளிடம் கவர்ச்சி காட்ட வேண்டியிருக்கும் என்று சொல்லி விட்டார்களாம். அவரும் யோசித்துப் பார்த்து சரி என்று சம்மதித்தார்.
இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே தவமாய் தவமிருந்து படத்தின் நாயகி பத்மப்ரியா கவர்ச்சிக் களத்தில் குதித்துப் பார்த்தும் தேறாமல் தேய்பிறையாகி விட்டார். இப்போது அப்படத்தின் 2வது நாயகியான மீனாள் கவர்ச்சிக்கு வந்துள்ளார்.
ஆனால், மீனாளின் இந்த கவர்ச்சிப் பிரவேசம், அவருக்கு எந்த வகையில் பலன் அளிக்கப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











