ஒப்பந்தத்தை மீறவில்லை- மேக்னா

இதுகுறித்து அவர் நடிகர் சங்கத்தில் தனி புகார் ஒன்றை நேற்று கொடுத்துள்ளார்.
வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர், பிரமிளா ஜோஷி. இவருடைய மகள் மேக்னா, கிருஷ்ண லீலை படத்தில் ஜீவனுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஸெல்வன் இயக்கும் இந்தப் படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா சார்பில் அவருடைய மகள் புஷ்பா கந்தசாமி தயாரிக்கிறார்.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெறுகிறது. இந்த நிலையில் மேக்னா, கிருஷ்ணலீலை' படத்தில் நடித்து முடித்துக் கொடுக்காமல், எங்க வீட்டு பிள்ளை என்ற புதிய படத்தில் நடிக்கப் போய்விட்டதாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பட அதிபர் புஷ்பா கந்தசாமி புகார் செய்தார்.
இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகை மேக்னா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பட அதிபர் புஷ்பா கந்தசாமி மீது புகார் கொடுத்து இருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ண லீலை படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தபோது, கவிதாலயம் நிறுவனம் என்னுடன் எந்த ஒப்பந்தத்தையும் போடவில்லை. கடந்த 2008 செப்டம்பர் மாதம் வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்று மட்டும் சொன்னார்கள். அதை நான் மீறவில்லை.
கிருஷ்ண லீலை படம் அவர்கள் சொன்ன காலகட்டத்துக்குள் முடிவடையாமல், என்ன காரணத்தாலோ தாமதமாகிக்கொண்டே போனது. முதலில் படத்தின் கதாநாயகன் ஜீவனின் தந்தை காலமாகிவிட்டதாக கூறி, ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடத்தவில்லை.
எத்தனை நாள் வீட்டில் உட்காந்திருப்பது?
அதன்பிறகு, குசேலன், திருவண்ணாமலை ஆகிய 2 படங்களும் முடிந்து திரைக்கு வந்த பின்பே கிருஷ்ண லீலை' படப்பிடிப்பு நடக்கும் என்று கூறினார்கள். அதன்படி, அந்த 2 படங்களும் திரைக்கு வந்துவிட்டன. என்றாலும் கிருஷ்ண லீலை படப்பிடிப்பை உடனடியாக தொடங்கவில்லை.
என் தந்தை அடிக்கடி, பட நிறுவனத்துடன் தொடர்புகொண்டு, எப்போது படப்பிடிப்பு தொடங்கும்? என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் அவர்கள் படப்பிடிப்பு தொடங்குவது போல் தெரியவில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் நான் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியும்?
எங்க வீட்டு பிள்ளை படத்தை நான் ஒப்புக்கொண்டதை தெரிந்துகொண்டதும், என்னிடம் வந்து மீண்டும் கால்ஷீட் கேட்கிறார்கள். இது, எந்த வகையில் நியாயம்? இந்த பிரச்சினையில், நடிகர் சங்கம் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும், என்று மேக்னா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











