நமீதாவும் காஸ்ட்லிதான்!

இன்று கிளாமர் புயல் நமீதா காஸ்ட்லியான கதை...
அம்மணியின் சம்பளம் இப்போ முக்கால் கோடி. அது எப்படி என்கிறீர்களா...
கார்த்தீகை படத்தில் மாளவிகாவுக்கு அந்தப் பட தயாரிப்பாளர் கொடுத்த சம்பளம் ரூ.75 லட்சம். தயாரிப்பாளர் அடிவயிற்றில் கைவைத்தார் என்று கூப்பாடு போட்டு மாளு விலகிவிட்டார் அல்லவா... அந்த இடத்துக்கு வர நமீதா கேட்ட தொகை அதே ரூ.75 லட்சம்.
ஆஞ்சநேயலு (இவர்தான் மாளவிகா வயிற்றில் கைவைத்த பார்ட்டி) இதற்கும் ஒப்புக் கொண்டார். இப்போது தன்னைத் தேடிவரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் நமீதா சொல்லும் பதில்:
சம்ப்ளம் எல்வத்தஞ்சி (எழுபத்தஞ்சாம்!) கொட்த்துடு. நான் எல்லாம் பாத்துக்கும். கவ்லே வேணாம். 'ஆராம்சே' இருங்கோ... பட்த்தே கஷ்டமில்லாமெ முட்சி கொட்குது... மீதியெ என் மேனேஜர் பாத்துக்கும்... (இது நமீதாவின் கவர்ச்சித் தமிழ்... கஷ்டமில்லாம புரியும்!)
இப்போதைக்கு 8 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நமீதா, கால்ஷீட் கேட்டு வரும் புதிய தயாரிப்பாளர்களை 6 மாதம் காத்திருக்கச் சொல்கிறாராம்.


Click it and Unblock the Notifications











