சிம்புவுடன் உறவு இல்லை-சனா

By Staff

Sana Khan
சிலம்பாட்டம் படத்தில் நடித்ததோடு எனக்கும் சிம்புவுக்குமான தொடர்பு நின்றுவிட்டது. எனக்கு முதல் படம் தந்தவர் என்பதால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. மற்றபடி வேறு எந்த உறவும் இல்லை என்கிறார் சனா கான்.

தம்பிக்கு இந்த ஊரு படத்தில் டென்னிஸ் வீராங்கனையாக நடிக்கிறார் சிலம்பாட்டம் புகழ் சனா கான்.

சிலம்பாட்டத்தில் கிராமத்துப் பெண்ணாக ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் சனாகான். படம் சுமாராகப் போனாலும், இவருக்கு மட்டும் படங்கள் குவியத் தொடங்கியுள்ளன. அவரும் எந்தக் கெடுபிடியும் காட்டாமல், வருகிற தயாரிப்பாளர்களிடமெல்லாம் அட்வான்ஸை வாங்கிப் போட்டு வருகிறாராம்.

இப்போது பரத் ஜோடியாக தம்பிக்கு இந்த ஊரு படத்தில் நடிக்கிறார் சனாகான். ஆனால் சிலம்பாட்டம் ரோலுக்கு நேரெதிர் வேடமாம் இந்தப் படத்தில்.

இதுகுறித்து சனாகான் இப்படிக் கூறுகிறார்:

சிலம்பாட்டம் படத்துக்கு பின் பரத் ஜோடியாக தம்பிக்கு இந்த ஊரு படத்தில் நடிக்கிறேன்.

சென்னையைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையாக, மாடர்ன் பெண்ணா இந்தப் படத்தில் நடிக்கிறேன். முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதையிது. இதில் நடித்தபடியே மும்பையில் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன்.

இந்தியில் நடிக்க முயற்சி செய்யவில்லை. அதைவிட விளம்பரங்களில் நல்ல லாபம் பார்க்க முடியும். பெரிய பட வாய்ப்பு வந்தால் மட்டுமே இந்தியில் நடிப்பேன். தமிழ் சினிமாவுக்கு நான் புதுசு. அதனால் இப்போதைக்கு வலுவான கேரக்டர்களை எதிர்பார்க்கவில்லை. கமர்ஷியல் படங்களில் ஜாலியாக வந்து போவதையே விரும்புகிறேன்.

சிலம்பாட்டம் படத்தில் நடித்ததோடு எனக்கும் சிம்புவுக்குமான தொடர்பு நின்றுவிட்டது. எனக்கு முதல் படம் தந்தவர் என்பதால் அவர் மீது எனக்கும் மரியாதை உண்டு. வேறு எந்த உறவும் இல்லை என்கிறார் சனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X