சாமி படத்தை நிராகரித்த பத்மா

மிருகம் படத்தின் ஷூட்டிங் மதுரை பக்கம் நடந்தபோது சரியாக நடிக்காததால் ஆத்திரமடைந்த இயக்குநர் சாமி, பத்மப்ரியாவை கன்னத்தில் அடிக்கப் போக, அவர் கோபமடைந்து ஷூட்டிங்கைப் புறக்கணித்து விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்து தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார்.
புகாரை விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சில், சாமிக்கு ஒரு ஆண்டு தடை விதித்தது. இந்த நிலையில் மீண்டும் சாமி இயக்க வருகிறார்.
மிருகம் பட நாயகன் ஆதிதான் புதிய படத்தின் ஹீரோ. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் பத்மப்ரியாவை நாயகியாகப் போடலாம் என்று சாமியிடம் பரிந்துரைத்துள்ளார். எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சாமி கூறியிருக்கிறார்.
இதையடுத்து பத்மப்பிரியாவை அணுகியுள்ளனர். ஆனால் அவருக்கு படத்தில் நடிக்க விருப்பமில்லை போல. எனவே ஸாரி சொல்லி விட்டாராம். இதையடுத்து வேறு நாயகியைத் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











