சிங்களக் காதலில் பூஜா?

By Staff

Pooja
இலங்கைக்காரர்கள் நான் தமிழ் வாலிபரைக் காதலிப்பதாகவும், தமிழ்நாட்டுக்காரர்கள் நான் சிங்களவரைக் காதலிப்பதாகவும் எழுதுவது சிரிப்பாக உள்ளது, என்கிறார் பூஜா.

பூஜா தனது காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இதனால் புதுப்படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் செய்தி வெளியானது.

இந்த நிலையில்,நான் கடவுள் படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்ட பூஜா, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் சிங்கள வாலிபரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின்றன.

இங்கே இப்படி என்றால், இலங்கை மீடியாக்களில், நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை காதலிப்பதாகவும், விரைவில் அவருக்கும் எனக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் எழுதுகிறார்கள். படித்தால் சிரிப்புதான் வருகிறது.

இதில் துளிகூட உண்மை கிடையாது. நான் யாரையும் காதலிக்கவில்லை. திருமணத்தைப் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. ஆனால், என் தந்தை திருமண விஷயம் பற்றி பேசத் தொடங்கியுள்ளார்.

அவரிடம், 'நான் கடவுள்' ரிலீஸான பிறகு திரையுலகில் எனக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து முடிவு செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். அவரும் என் உணர்வுக்கு மதிப்பளித்து காத்திருக்கிறார்.

இந்தப் படம் திருப்புமுனையாக அமையும். இப்போது சிங்களப் படங்களிலும் பிஸியாக இருக்கிறேன், என்றார் பூஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X