மீண்டும் பிரகதி

By Staff

Pragathi
ஓரிரு படங்களில் நாயகியாக நடித்து பின்னர் காணாமல் போன பிரகதி மீண்டும் தலை காட்டுகிறார் - இம்முறை கேரக்டர் ரோலில்.

சரத்குமாருடன் கம்பீரம் படத்தில் ஜோடியாக நடித்தவர் பிரகதி. பின்னர் ஜெய் ஆகாஷுடன் இரு படங்களில் நடித்தார். நடிப்பிலும், நடனத்திலும் அவர் சரிவர சோபிக்காததால், ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

இடையில் ஜெய் ஆகாஷுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். அதன் பின்னர் சுத்தமாக படங்களே இல்லாத நிலை ஏற்பட்டது பிரகதிக்கு. இப்போது மீண்டும் அவரைத் தேடி ஒரு படம் வந்துள்ளது.

சிம்பு நடிக்கும் சிலம்பாட்டம் படத்தில் பிரபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். வயதானவர் கெட்டப்பில் இப்படத்தில் பிரபு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரகதி நடிக்கவுள்ளார்.

முதலில் நதியா, கெளசல்யா, பானுப்பிரியா என பலரையும் கேட்டனர். ஆனால் வயதான கெட்டப்பில் நடிக்க அவர்கள் மறுத்து விட்டனராம். கடைசியில் பிரகதியை அணுகினர். வராது வந்த மாமணியே வருக என்பதைப் போல வந்த வாய்ப்பை கப்பென பிடித்துக் கொண்டு நடிக்க ஒப்புக் கொண்டாராம் பிரகதி.

இப்படத்தில் தனக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடிப்பது குறித்து முடிவு செய்யவுள்ளாராம் பிரகதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X