பிருத்விராஜுடன் பிரியா மணி!

பருத்தி வீரனுக்கு முன்பு இருந்த பிரியாமணி, அப்படத்திற்குப் பின்னர் காணாமல் போய் விட்டார். பருத்தி வீரன் கொடுத்த பிரேக்கால் பல பட வாய்ப்புகள் பிரியாவைத் தேடி வந்தன. ஆனால், எல்லாமே பாவாடை, தாவணி டைப் ரோல்களாக இருந்ததால் கடுப்பாகிப் போன பிரியா, அத்தனைக்கும் பிரியா விடை கொடுத்தார்.
பருத்தி வீரன் இமேஜை மறைக்க ஒரே வழி கிளாமர்தான் என்ற முடிவுக்கு ம் வந்து கிளாமர் களத்தில் குதித்தார். மலைக்கோட்டை, தோட்டா ஆகிய படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமராக நடித்தார்.
ஆனால் இது எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விட்டது. கிளாமர் காட்டினால், அந்த ரேஞ்சுக்கு வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த அவருக்கு வந்த வாய்ப்புகளும் ஜகா வாங்கவே படங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது பிரியா மணிக்கு.
எங்கு தப்பு, என்ன தப்பு என்று பிரியா மணி யோசித்துக் கொண்டிருந்த நிலையில்தான் புதிதாக பிருத்விராஜுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இந்த கேரக்டரையும் கூட பிரியா மணியே தேடிப் போய் பிடித்து வந்துள்ளாராம்.
பிருத்விராஜுடன் பிரியா மணி இணைவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு மலையாளத்தில், சத்யா படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்போது 2வது முறையாக ஜோடி போடுகிறார்கள்.
பிருத்வியும், பிரியாவும் இணையும் இப்படம் மலையாளத்தில் வெளியாகி சக்ஸஸ் ஆன கிளாஸ்மேட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். நாயகி கேரக்டருக்கு இப்படத்தில் நல்ல வெயிட் உள்ளதால், பலரும் முட்டி மோதினராம் நடிக்க. ஆனால் சத்யா படத்தில் தனக்கு பிருத்விராஜிடம் கிடைத்த அறிமுகத்தை வைத்து சான்ஸை தட்டிப் பறித்து விட்டார் பிரியா மணி என்கிறார்கள்.
கிளாஸ்மேட்ஸ் மூலமாக பிரேக்கை எதிர்பார்க்கிறார் பிரியா மணி.


Click it and Unblock the Notifications











