கிளாமரே வேண்டாம் ... ரம்யா

By Staff

Remya nambeesan
எனக்கு கிளாமர் வேடங்களே வேண்டாம். கடைசி வரை ஹோம்லியான ரோல்களில் மட்டுமே. கிளாமர் காட்டுவது ஆபாசமான செயலாக கருதுகிறேன் என்று படு காட்டமாக கூறுகிறார் ரம்யா நம்பீசன்.

கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்துள்ள லேட்டஸ்ட் தேவதைதான் ரம்யா நம்பீசன். முதல் படமான ராமன் தேடிய சீதை ஹிட்டாகியுள்ளதால் ரம்யாவுக்கு கோலிவுட்டின் போகஸ் கிடைத்துள்ளது.

தமிழுக்கு புதிதாக இருந்தாலும் நடிப்பு இவருக்கு புதிதல்ல. மலையாளத்தில் 3 படங்களில் திறமையை காட்டியுள்ளார். தமிழில் ராமன் தேடிய சீதை முதல் படம்.

முதல் படமே ஹிட்டாகி விட்டதால் சென்டிமென்ட்டாக தமிழை தனது வெற்றிகளமாக கருத ஆரம்பித்துள்ளாராம் ரம்யா.

எப்படியெப்படி நடிப்பீங்க என்று ரம்யாவிடம் கேட்டால், என்னிடம் ஒரே ஒரு அஜென்டாதான். அது ஹோம்லியான ரோல்களில் மட்டுமே நடிப்பது. கிளாமர் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்.

கவர்ச்சிகரமாக நடிப்பது என்பது ஆபாசமான செயலாக கருதுகிறேன். அதிலும் சினிமாவில் கவர்ச்சி என்பதை ஆபாசமாக நடிப்பது என்று மாற்றி வைத்துள்ளனர். பார்க்கும் ரசிகர்களையும் அந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும் என்ற நிலையையும் உருவாக்கி வைத்துள்ளனர். அப்படிப்பட்ட கிளாமர் எனக்கு வேண்டாம்.

ஒரு சிரிப்பில், சேலையில், அழகான உடையில் கூட கிளாமராக தோன்ற முடியும். அதுதான் உண்மையான கவர்ச்சி. ஆடைக் குறைப்பு நிச்சயம் கவர்ச்சி அல்ல, அது ஆபாசம் என்கிறார் வேகமாக.

கூல், கூல் என்று கோபத்தைக் குறைத்து டிராக்கை மாற்றி ராமன் தேடிய சீதையில் தனி ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பில்லையே. எப்படி ஒப்புக் கொண்டீர்கள் என்றோம்.

அப்படியெல்லாம் இல்லை. எனது கேரக்டர் எனக்குப் பிடித்திருந்தது. நடிப்புக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தேன். எனவேதான் மற்ற நாயகிகள் குறித்து கவலைப்படாமல் ஒத்துக் கொண்டேன். மலையாளத்தில் இப்படிப்பட்ட படங்கள் சகஜமானது. எனவேதான் எனக்கு தயக்கம் இல்லை என்றார் ரம்யா.

கொச்சியில் வசித்தபடி கோலிவுட்டுக்கு விசிட் அடித்துக் கொண்டிருக்கும் ரம்யாவுக்கு பரதநாட்டியம் ரொம்பப் பிடிக்குமாம். கற்றுக் கொண்டிருக்கிறாராம். அடுத்து தமிழில் ஆட்டநாயகன் படத்தில் நடிக்கிறார் ரம்யா. ஜோடி போடுவது பி.வாசுவின் மகன் ஷக்தி. காரைக்குடியில் கேம்ப் போட்டு படப்பிடிப்புக்கு போய்க் கொண்டிருக்கிறாராம்.

மலையாளத்திலும், தமிழிலும் நல்ல பெயரை எடுக்க வேண்டும், தொடர்ந்து நிறையப் படங்களில், விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ரம்யாவின் இப்போதைய லட்சியமாம்.

நிறைவேறட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X