சங்கீதாவின் சேவை தொடரும்!

ரசிகா என்ற பெயரில் முன்பும், பின்னர் சங்கீதா என்ற பெயரிலும் பல படங்களை நடித்து முடித்து விட்ட சங்கீதா, பாடகர் கிரீஷை சமீபத்தில் திருவண்ணாமலையில் வைத்து மணந்தார்.
திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் ஹனிமூன் பயணத்திற்கு ஆயத்தமாகி வருகிறார் சங்கீதா.
ஹனிமூனை முடித்து விட்டு ஊர் திரும்பியதும் மீண்டும் சினிமாவில் பிசியாக நடிக்கப் போகிறாராம்.
எல்லோரையும் போல இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டு பிறகு சுற்றி வளைத்து நடிக்க வரும் நடிகைகள் போல இல்லை நான். நிச்சயம் தொடர்ந்து நடிப்பேன் என்று தெளிவாகவே கூறுகிறார் சங்கீதா.
அதேபோல தனது கணவர் கிரீஷுக்கும் நடிப்பு ஆசை இருப்பதால் அவருக்கும் சான்ஸ் தேடித் தரப் போகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications