மகிழ்ச்சிக் கடலில் ஷம்மு..

காஞ்சிவரம் படத்தின் மூலம்தான் ஷம்மு கவனிக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் ஒரு பிரபலப் படத்தில் நடித்திருந்தார். அது தசாவதாரம்.
அமெரிக்காவில் வசிக்கும் விஞ்ஞானி கமலின் ரசாயன கூடத்தில் அவரது உதவியாளராக வருவாரே ஒரு பெண். அவர் வேறு யாருமல்ல, ஷம்முவேதான்.
அந்தப் படத்தில் நடித்த குரங்கைப் பார்த்துதான் நடிப்பின் மீது தனிக் காதலே வந்து விட்டதாம் ஷம்முவுக்கு. குரங்கின் நடிப்பால் கவரப்பட்ட அவர், குரங்கே இவ்வளவு அழகாக நடிக்கிறது, நாம் ஏன் தொடர்ந்து நடிக்கக் கூடாது என்று அப்போது உறுதி எடுத்துக் கொண்டாராம் ஷம்மு.
இப்போது காஞ்சிவரம் அவரை நல்ல நடிகையாக அடையாளம் காட்டியிருக்கிறது. அடுத்து வரப் போகும் மலையன் படத்தையும் பெரிதாக எதிர்பார்த்திருக்கிறார் ஷம்மு.
இதுதவிர மாத்தியோசி, மயிலு ஆகிய படங்களும் கையில் உள்ளனவாம். மலையன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால் புதிய பட வாய்ப்புகளும் வருகிறதாம்.
இதனால் மகிழ்ச்சிக் கடலில் நீந்தி வருகிறார் கேரளாவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து, கோலிவுட்டுக்கு வந்துள்ள ஷம்மு.
தான் இவ்வளவு சிறப்பாக நடிக்க இயக்குநர் பிரியதர்ஷன்தான் காரணம். அவர் சொன்னதை மட்டுமே நான் காஞ்சிவரம் படத்தில் செய்தேன். ஆனால் என்னை சிறந்த நடிகையாக பலரும் கூறுவது பெருமையாக உள்ளது என்கிறார் ஷம்மு.


Click it and Unblock the Notifications











