உணர்ச்சி மிகுந்து ஆனந்தக் கண்ணீர் விட்டேன்! - நடிகை ஷில்பா ஷெட்டி

நாடு முழுக்க இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி குறித்துதான் பேச்சாக உள்ளது. இன்னும் கூட இந்த வெற்றியின் தாக்கம் கொஞ்சமும் குறையவில்லை பாலிவுட்டில்.
போட்டியை நேரில் கண்டுகளித்த நடிகை ஷில்பா ஷெட்டி இப்படிக் கூறுகிறார்:
இந்திய அணி வெற்றி பெற்றதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இது ஒரு அருமையான நிகழ்வு. இந்திய அணி வெற்றிப்பெற்றதும் யுவராஜ் ஆனந்த கண்ணீர் வடித்தார். இதனை பார்த்ததும் என்னை அறியாமலேயே நானும் அழுதுவிட்டேன்.
இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடிய விதம் அனைவருக்குமே ஒரு உதாரண பாடமாக இருந்தது.
28 வருடங்களுக்கு முன்பு (1983) இந்திய அணி முதல் உலக கோப்பையை வென்றது. அப்போது உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்த என்னுடைய தந்தை ஆனந்த கண்ணீர் வடித்தார். இதனை நான் நினைத்து பார்க்கின்றேன். அன்று என் தந்தைக்கு நேர்ந்த அதே உணர்வு இப்போது எனக்கும், என்றார் ஷில்பா.


Click it and Unblock the Notifications











