தனுஷுடன் மீண்டும் ஷ்ரியா!

படிக்காதவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார். இம்முறை அவர் நடிக்கப் போவது இந்தியில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'ஜப் வி மெட்' ரீமேக் ஆகும்.
மோசர்பெயர் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. முதலில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷாவை புக் செய்திருந்தனர். ஆனால் தற்போது திரிஷாவைத் தூக்கிவிட்டு ஷ்ரியாவை போட்டுள்ளனர்.
திருவிளையாடல் ஆரம்பம் படத்திற்குப் பின்னர் தனுஷும், ஷ்ரியாவும் 2வது முறையாக ஜோடி சேரவுள்ளனர்.
மோசர்பெயரும், பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸும் இணைந்து தயாரிக்கும் அபியும் நானும் படத்தில் திரிஷாதான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாஹித்கபூர், கரீனா கபூர் இணைந்து நடித்த மெகாஹிட் படம்தான் ஜப் வி மெட். இப்படம் தற்போது தமிழ் ரசிகர்களுக்கேற்ற வகையில் மெருகேற்றப்பட்டு உருவாகவுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications