'ஸ்லிம்'ரன் ஆன சிம்ரன்!

பெரிய திரை வாய்ப்பை மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்த சிம்ரனுக்கு அது கை கூடவே இல்லை. இதையடுத்து அவரை அரவணைத்தது சின்னத் திரை. அவரும் அற்கு கை குலுக்கினார். விளைவு ஒரே நேரத்தில் இரு பெரும் சானல்களில் சிம்ரன் கலக்கப் போகிறார்.
ஜெயா டிவியில் சிம்ரன் திரை என்ற சீரியலிலும், சன் டிவியில் சூப்பர்ஸ்டார்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலகக்க வருகிறார் சிம்ரன்.
ஜெயா டிவியில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் சிம்ரன் திரை, ஒரு வருட சீரியல் ஆகும். இதில் மாதத்திற்கு ஒரு கதை வீதம் மொத்தம் 12 கதைகள் தொடர்களாக ஒளிபரப்பாகும்.
முதல் மாதக் கதை வண்ணத்துப் பூச்சி. இதை எழுதியவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. முதல் மாத கதையை இயக்கியுள்ளவர் நடிகை ஸ்ரீபிரியா. பிரமீட் சாய்மீரா நிறுவனம் இதை தயாரிக்கிறது.
12 கதைகளிலும் சிம்ரன்தான் நாயகி. நாயகர்கள் மட்டும் மாறுவார்கள். சிம்ரன் திரை சீரியல் அல்ல என்கிறார் சிம்ரன். இது டெலி பிலிம் என்பது சிம்ரனின் கருத்து.
இந்தத் தொடருக்காக 25 கிலோ எடையைக் குறைத்து சிக் என மாறியுள்ளாராம் சிம்ரன்.
முதல் எபிசோடில் சிம்ரனுக்கு ஜோடியாக நடிப்பவர் ராகவ். சிறு சிறு வேடங்களில் படங்களில் நடித்து வரும் ராகவ், அண்ணி என்ற சீரியல் மூலம் டிவிக்கு வந்தவர்.
டிவியில் நடித்தாலும் சினிமாவிலும் தனது கவனத்தை விடப் போவதில்லையாம் சிம்ரன். இரண்டுக்கும் சம முக்கியத்துவம் தருவாராம். தற்போது அவர் நடித்துள்ள தெலுங்குப் படம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதாம்.
தமிழில் கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்திலும் சிம்ரன் வித்தியாசமான ரோலில் நடிக்கிறார். இதுதவிர ஹரி இயக்கத்தில், பரத் மூன்று வேடங்களில் நடிக்கும் சேவல் படத்திலும் சிம்ரனுக்கு அட்டகாசமான பாத்திரமாம். இந்தக் கேரக்டர் குறித்த தகவல்களை ஹரி படு ரகசியமாக வைத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications