'பதுக்கம்மா' சிந்து துலானி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலிவுட் களத்தில் குதித்தனர் சிந்து துலானி. ஆனால் அவருக்கு தமிழில் சுத்தமாக அதிர்ஷ்டமே இல்லை. இத்தனைக்கும் தனுஷ், சிம்பு என இரு பெரும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டும் கூட தேற முடியாமல் போய் விட்டது.
தமிழ்தான் இப்படிக் கைவிட்டு விட்டது. ஆனால் தெலுங்கு, சிந்துவுக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்தது. சமீபத்தில் சிந்து நடித்த பதுக்கம்மா வெற்றிப் படமானது. அதேபோல விக்டரி என்ற படமும் ஹிட் ஆனது.
இதனால், சிந்துவைத் தேடி வாய்ப்புகள் ஓடி வந்து கொண்டுள்ளன. கல்யாண் ராம், என்.டி.ஆர். ஜூனியருடன் ஜோடி போடும் வாய்ப்புகள் வந்துள்ளன. இன்னும் சில வாய்ப்புகளும் வந்துள்ளதாம்.
இதனால் சந்தோஷமாகியிருக்கும் சிந்து, எல்லாம் தனது கன்னத்தில் உள்ள மச்சம்தான் காரணம் என்கிறார். பார்ப்பதற்கு மட்டும் அழகாக இல்லாமல் கூடவே அதிர்ஷடத்தையும் கூட்டி வந்துள்ள மச்சம் இது என்கிறார் சிந்து.
தெலுங்குக்கு மட்டும்தான் இந்த மச்சம் 'வேலிட்' ஆகுமா சிந்து?


Click it and Unblock the Notifications











