இந்திப் படமே வேணாம் சாமி – பதறும் சிநேகா

இந்திப் படங்களில் நடிக்க சிநேகா முயற்சி செய்வதாகக் கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து சிநேகாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
நிறைய பேர் என்னிடம் இதைக் கேட்டுவிட்டார்கள். இந்திப் படத்தில் நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அது தேவையும் இல்லை எனக்கு. அதற்காக இந்தி படங்களில் நடிக்க எனக்கு வெறுப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். காரணம் கலைஞர்களுக்கு மொழி வித்தியாசமெல்லாம் கிடையாது.
உணர்வையும், உணர்ச்சியையும் காட்டுவதுதான் நடிப்பு. இரண்டுக்கும் மொழி கிடையாது. ஆனாலும் எனக்கு இந்தியில் நடிக்கும் ஆர்வமில்லை.
எந்த படத்தில் நடித்தாலும் என் கேரக்டர் என்ன என்று மட்டும்தான் பார்க்கிறேன். உடன் நடிப்பவர்கள் யார்? எத்தனை ஹீரோயின்கள் என்று பார்ப்பதில்லை. நூற்றுக்கு நூறு படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க இருக்கிறேன். எந்த எதிர்பார்ப்புகளையும் உருவாக்கி வைத்துக் கொள்வதில்லை.
சீக்கிரமே திருமணம் என்கிறார்களே...
மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா... திருமணத்தை பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு கைவசம் எக்கச்சக்கமா படங்கள் இருக்கு. முடியட்டும்... பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











