கிளாமரும் நடிப்புதான்-சுனைனா

ஆந்திர வரவாக இருந்தாலும் சுனைனாவின் முதல் படமே பரபரப்பாகப் பேசப்பட்டதில் ராசி முத்திரை விழுந்துவிட்டது அவருக்கு. இதன் விளைவு, வரிசையாக 4 புதுப் படங்களில் தனி நாயகியாகவே ஒப்பந்தமாகியுள்ளாராம் சுனைனா.
அவர் கூறுகையில்,
காதலில் விழுந்தேன் பெற்றுள்ள வெற்றி பிரமிக்க வைக்கிறது. இந்த வெற்றியின் பயனாக 4 புதுப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்.
இவற்றில் இரண்டு படங்களில் கிளாமருக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள். கிளாமர் வேடம் என்று சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை கிளாமர் வேடங்களில் நடிப்பது மாபெரும் குற்றமல்ல. அதுவும் ஒருவித நடிப்புதான். காதலில் விழுந்தேன் படத்தில் எங்கும் கிளாமர் திணிப்பு கிடையாது. அந்தப் பாடல் இயல்பாகவே ரொமான்டிக்கானது. அதில் அப்படித்தான் தோன்ற முடியும் என்றார்.
அடடா... என்னே தாராளம்!
Comments


Click it and Unblock the Notifications