ராஜா ராணி.. தமன்னா!

இந்தியில் கரீனா கபூர், ஷாஹித் கபூர் இணைந்து நடித்த வெற்றிப் படம் ஜப் வி மெட்.
இப்படம் இப்போது தமிழில் ராஜா ராணி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பரத், தமன்னா இணைந்து நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் போட்டோ ஷூட்டுக்காக சென்னையில் முகாமிட்டுள்ளார் தமன்னா. இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார் தமன்னா.
இதற்காக அவரது தலை முடியை குட்டையாக்கியுள்ளனர். மேலும் சில நகாசு வேலைகளை செய்துள்ளனராம். இதனால் பார்க்க படு சிக் என தோன்றுகிறாராம் தமன்னா.
இந்த லுக்குக்கு சாதனா லுக் என்றே பெயராம். 60களில் இருந்த அழகுப் பெண்களின் தோற்றத்தை இப்போது தமன்னாவிடம் கொண்டு வந்துள்ளனராம்.
இதுகுறித்து தமன்னாவே கூறுகையில், ராஜா ராணி படத்துக்காக எனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளேன். இந்த வாரம் போட்டோ ஷூட் நடைபெறவுள்ளது என்றார்.
பாலிவுட்டில்தான் ஹீரோயின்கள் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு லுக்கில் தோன்ற விரும்புவார்கள். அந்த பாணியை தற்போது தமன்னா தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார்.
வழக்கமாக இளம் நாயகிகள் எல்லோரும் நீண்ட தலை முடியுடன் வரவே விரும்புவார்கள். ஆனால் தமன்னா படு டிபரன்ட் ஆக உள்ளார்.
ரசிகர்களுக்கு சந்தோஷமா இருந்தா சரிதான்...


Click it and Unblock the Notifications











