நல்ல பெயர் கிடைத்தால் போதும்-மீரா வாசுதேவன்
கை நிறையப் படங்கள் வேண்டும், தனி நாயகியாகவே நடிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு எந்த ஆசையும் இல்லை. நாலு படத்தில் நடித்தாலும் நல்ல நடிகையாக திகழ வேண்டும் என்று அடக்கமாக பேசுகிறார் மீரா வாசுதேவன்.
விவாகரத்துக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் மீரா வாசுதேவன். மலையாளத்து வில்லன் நடிகருடன் புதுக் காதலில் ஈடுபட்டிருக்கும் மீரா தற்போது இந்திப் படம் ஒன்றில் நடிக்கிறாராம். அதேபோல மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
ஆட்டநாயகன் படத்தில் அவரது கேரக்டருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிகின்றனவாம். இதைச் சொல்லி மகிழும் மீரா, புதிய பட வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கப் போகிறேன்.
தமிழில் நிறைய நடிக்க ஆசையாக உள்ளேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் போதும், தாராளமாக நடிக்க நான் தயார் என்கிறார் மீரா வாசுதேவன்.
தனி நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்றெல்லாம் கூற மாட்டாராம் மீரா. மாறாக நந்திதா தாஸ் போல நல்ல நடிகை என்று பெயரெடுக்க ஆசை என்கிறார் அடக்கமாக.


Click it and Unblock the Notifications











