கெட்டவனில் நடிப்பாரா லேகா?

ஆனால் அதே லேகா வாஷிங்டன் இன்று ஒரே படத்தில் சூப்பர் நடிகையாகிவிட்டார். தினமும் ஒரு புது வாய்ப்பு, விதவிதமான பாராட்டுக்கள் என உற்சாகத்தில் மிதக்கிறார் அம்மணி.
காரணம் 'ஜெயம் கொண்டான்' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு. இத்தனைக்கும் இந்தப் படத்தில் அவர் முழு நாயகியும் கிடையாது.
பாவானாதான் கதாநாயகி. இவர் கதாநாயகனின் தங்கையாகத்தான் வருகிறார். ஆனால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய விதத்தில் ஜெயித்திருக்கிறார் லேகா.
புதிய முகம், ஜில்லென்ற தோற்றம்... நடிப்புமிருக்கிறது. கூடவே கவர்ச்சிக் காட்சிகளுக்கு எந்த ஆட்சேபணையும் சொல்லாத பெண் என்பதால் இப்போது அம்மணி காட்டில் அடைமழைக்கான அறிகுறிகள் தெரியத் துவங்கியுள்ளன.
இப்போது அவர் கைவசம் நான்கு புதிய படங்கள். இன்னும் தெலுங்குப் படவுலகிலிருந்தும் அழைப்பு மேல் அழைப்பு வருகிறதாம்.
சிம்புவும் நிறுத்தி வைத்திருந்த கெட்டவன் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கும் ஐடியாவிலிருக்கிறாராம்.
ஆனால் இப்போது அந்தப் படத்தை ஒப்புக் கொள்ளும் மூடிலிருக்கிறாரா லேகா... சந்தேகம்தான்... சினிவாச்சே!


Click it and Unblock the Notifications











