கவர்ச்சியாக நடிக்க ஆசையாக இருக்கிறது-அனகா

By Sudha

கவர்ச்சியாக நடிக்கவும் எனக்கு ஆசை உள்ளது. மாறி மாறி அனைத்து கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார் புதுமுக மலையாளத்து வரவு அனகா.

அமைதியான அழகுடன், அம்சமாக இருக்கிறார் அனகா. சிந்துசமவெளி மூலம் கோலிவுட்டுக்கு வந்துள்ள கேரளத்துச் சிட்டு. முதல் படத்திலேயே அவருக்கு சர்ச்சைக்குரிய வேடம். இருந்தாலும் அதை சற்றும் தயங்காமல் ஏற்று நடித்துள்ளார்.

சரி முதல் படத்திலேயே இப்படி நடிக்க எப்படி துணிந்தீர்கள் என்று கேட்டால், அய்யோ, இது முதல் படமில்லை.நான் நடித்த முதல் படம் வீரசேகரன். அதில் அமலா பால் என்ற பெயரில் நடித்திருப்பேன். இப்போது அனகா என்று பெயர் மாறி நடித்த படம்தான் சிந்துசமவெளி.

படத்தில் எனது கேரக்டரை அனைவரும் பாராட்டுகிறார்கள்.இயக்குநர் சாமியின் படம் என்பதால் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது. இதனால்தான் நான் கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். நாட்டில் நடப்பதைத்தான் சாமி படமாக கொடுத்திருக்கிறார். எனவே இதை சர்ச்சை என்று சொல்ல முடியாது என்கிறார் அனகா.

அனகாவுக்கு 15 வயதிலேயே நடிக்கும் ஆசை வந்து விட்டதாம். அப்போதே நிறைய விளம்ரப் படங்கள் வந்ததாம். இப்போது 19 வயதின் விளிம்பில் நிற்கும் நிலையில் நிறையப் பட வாய்ப்புகள் வருகிறதாம். எப்படிப்பட்ட ரோல்களில் நடிக்க ஆர்வம் என்று கேட்டால், எல்லா பாத்திரங்களிலும் நடிக்க ஆசை. கவர்ச்சியாகவும் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஆபாசமான முறையில் அல்ல, அழகான, அளவான கவர்ச்சியுடன். டான்ஸ் மீது எனக்கு நிறைய வெறி உண்டு. அப்படிப்பட்ட பாத்திரங்கள் வந்தாலும் நடிக்க ஆசை என்கிறார் சின்னதாக சிரித்தபடி.

தாய் மொழி மலையாளம் என்பதால் மலையாளத்திலும் புகுந்து விளையாட பேரார்வத்தில் இருக்கிறாராம் அனகா. அதேசமயம், தமிழிலும் கலக்கும் திட்டம் வைத்துள்ளார். இரண்டும், எனக்கு இரண்டு கண்கள் போல. எனவே இரண்டும் நிறையப் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளேன் என்கிறார் அனகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X