நமீதாவுக்கு ஆறுதல் தந்த சிம்ஹா

By Sudha

Namitha
தொடர் தோல்விப் படங்களால் துவண்டு போயுள்ள நமீதாவுக்கு ஆறுதல் அளித்துள்ளது தெலுங்குப் படமான சிம்ஹா.

சமீப காலமாக நமீதாவுக்கு நேரம் சரியில்லை. அவர் நடித்த அத்தனை படங்களும் பெரும் தோல்வியைத் தழுவி வந்தன. குறிப்பாக அவர் நடித்த அழகான பொண்ணுதான் படம் பெரும் தோல்வியைத் தழுவியது. மேலும் தொடர்ந்து திகட்டத் திகட்ட கவர்ச்சிகரமாகவே நடித்து வந்ததால் அவருக்கு கவர்ச்சி களியாட்ட நடிகை என்றமுத்திரை விழுந்து விட்டது.

இதனால் அவரைத் தேடி நடிக்கும் வாய்ப்புகளை விட கவர்ச்சிகரமாக நடிக்கும் வாய்ப்புகளே அதிகம் வந்தன. இதுபோதாதென்று அவர் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக வதந்தியை வேறு கிளப்பி விட்டு விட்டார்கள்.

இதனால் அப்செட் ஆகியிருந்தார் நமீதா. இந்த நிலையில் தெலுங்கிலிருந்து அவருக்கு ஆறுதல் தகவல் வந்துள்ளது. அது அவர் நடித்த சிம்ஹா படம் 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற நற் செய்தி.

இப்படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள். நயனதாரா, சினேகா உல்லல் என இரு ஹீரோயின்கள் படத்தில் உள்ளனர். ஆனால் நமீதாவுக்குத்தான் தியேட்டர்களில் கைத்தட்டல்கள் பலமாக கிடைக்கிறதாம். காரணம், நமீதாவின் கிறங்கடிக்கும் கவர்ச்சிக் காட்சிகள்.

மேலும் தற்போது அவர் நடித்துள்ள இன்னொரு தெலுங்குப் படமான தேஸ்துரோஹியிலும் நல்ல வேடமாம். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறார் நமீதா.

இந்த மகிழ்ச்சி போதாதென்று, கன்னடத்தில் அவர் மீரா ஜாஸ்மினுடன் இணைந்து நடித்த ஹூ படத்திற்கும் நிறைய பாராட்டுக்களாம். குறிப்பாக நமீதாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பாம்.

இதன் காரணமாக தளர்ச்சி அடைந்திருந்த நமீதாவி்ன் உள்ளம் தற்போது புத்தெழுச்சி பெற்றுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X