சிக்கு புக்கு... சிக்மகளூர்... சிட்டு ஸ்ரேயா!

இப்போது கவலையை மறக்க தன் 'ஜோடி' ஸ்ரேயாவுடன் சிக்மகளூரில் கேம்ப் போட்டிருக்கிறார் மனிதர். அய்யய்யோ... நீங்க தப்பா எடுத்துக்காதீங்... சிக்கு புக்கு என்ற படத்துக்காகத்தான் இந்த கேம்ப்.
மறைந்த ஜீவாவின் உதவியாளர் மணிகண்டன் இயக்கும் படம் இது.
மனதை வருடும் மென்மையான காதல் கதையாம் இந்தப் படம். சர்வத்தில் சாதாரணமாய் வந்து போனவர் இதில் மீண்டும் வித்தியாசமான கெட்டப்பாம்.
தோரணையில், தன் தோற்றம் குறித்து வந்த பரவலான விமர்சனங்களால் விசனம் கொண்ட ஸ்ரேயா இந்த்ப படத்துக்கென ஒரு சுற்று பெருக்க முடிவு செய்து, பிடித்த அயிட்டங்களையெல்லாம் 'நொறுக்கத்' தொடங்கியுள்ளாராம்.
கவர்ச்சி போதாது என்று நினைத்தார்களோ என்னமோ, ப்ரீத்தா ராவ் என்ற இன்னொரு நாயகியையும் உரித்த கோழியாக்க முடிவு செய்துள்ளார்களாம்.
ஹரிஹரன் - லெஸ்லி லீவிஸ் இசையமைக்கின்றனர்.
இந்தப் படம் தவிர மதராஸ்பட்டணம் என்ற வரலாற்றுப் படத்திலும் வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார் ஆர்யா என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











