அபிஷேக்குடன் நடிக்க மறுத்த அசின்!

லகான், ஜோதா அக்பர் படங்களை இயக்கிய அசுதோஷ் கோவாரிகர் இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்படிருந்தது. 'கேலேங்கே ஹம் ஜீ ஜான் ஸே' எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் சரித்திரப் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது.
இதில் அபிஷேக் பச்சன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அசின் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த மாதம் கையெழுத்திட்டார் அசின்.
படத்தை அசுதோஷ் இயக்குகிறார் என்றதும் கதை பற்றியெல்லாம் எதுவும் கேட்காமல் கையெழுத்துவிட்டாராம். ஆனால் ஸ்கிரிப்டை முழுமையாகப் படித்துப் பார்த்த அசினுக்கு அதில் திருப்தி இல்லையாம் (இதான் அசுதோஷின் போதாத காலம் என்பது!). அதனால் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்த அசின், கால்ஷீட் பிரச்சினை என்ற வழக்கமான காரணம் கூறி விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இப்போது அந்த வேடத்துக்கு கரீனா கபூர், ப்ரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் தீவிரப் போட்டியில் இறங்கிவிட்டார்களாம்.
இன்னொரு பக்கம், பாலிவுட்டுக்கு இன்னுமொரு புதிய முகத்தை நாயகியாக அறிமுகப்படுத்தும் நோக்கில் புதிய இளம் பெண்களை நேர்காணல் செய்துவருகிறாராம் அசுதோஷ் கோவாரிகர்.


Click it and Unblock the Notifications











