ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர்

By Staff

Aishwarya Rai
பத்துக் கோடி தாரேன்... ஐஸ் வந்தா போதும்! - 3 ஆண்டுகளாக 'உருகும்' தயாரிப்பாளர்

நடிகை ஐஸ்வர்யாவுக்கு வயது 35யைத் தாண்டிவிட்டது. ஆனாலும் கட்டுக் குலையாத அழகியாகக் காட்சியளிக்கிறார். இதனால் 30 வயதைத் தொட்டுவிட்டாலே கட்டாயமாக நடிகைகளுக்கு ஓய்வளித்துவிடும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஐஸ்வர்யா ராயை துரத்திக் கொண்டே இருக்கிறார்கள், கால்ஷீட்டுக்காக!.

இன்றும் இந்திய திரையுலகில் நம்பர் ஒன் நாயகி ஐஸ்தான். அவர் கால்ஷீட்டுக்காக கோடிகளில் கொட்டிக் கொடுக்கக் காத்திருக்கிறார்கள்.

கடைசியாக அவர் நடித்த சூப்பர் ஹிட் படம் ஜோதா அக்பர். அதன் பிறகு இன்னும் புதிய படம் எதுவும் வரவில்லை.

இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் எந்திரன், ராவணா, குஜாரிஷ், ஆக்ஷன் ரீப்ளே ஆகிய படங்கள் அனைத்துமே பெரும் பொருட்செலவில் உருவாகி வருகின்றன. ரஜினியின் எந்திரன் படத்துக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ 6 கோடி. இதுவரை எந்த நடிகையும் இந்தியாவில் வாங்காத சம்பளம் இது.

இப்போது ஒரு தயாரிப்பாளர் ரூ 10 கோடி தரக் காத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்க்கு. ஆனால் கடந்த ஓராண்டாக கெஞ்சிக் கூத்தாடியும் இன்னும் மனமிரங்கவில்லையாம் ஐஸ்!

அந்த தயாரிப்பாளர் பெயர் பாபி புஷ்கர்ணா. இவர் பேஜ் 3 என்ற படத்தைத் தயாரித்தார். அதன் மூலம் தேசிய விருதும் பெற்றவர். அடுத்ததாக ஒரு பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்க திட்டமிட்டு உள்ளார். அதில் நடிப்பதற்குத்தான் ஐஸ்வர்யா ராய்க்கு சம்பளமாக ரூ.10 கோடி அளிக்க முன்வந்துள்ளார்.

இதுபற்றி பாபி கூறுகையில், "ஐஸ்வர்யா ராயைத் தவிர வேறு நடிகை அதில் நடிக்க முடியாது. ஒருவேளை அவரது கால்ஷீட் கிடைக்காவிட்டால், அந்தப் படத்தையே எடுக்காமல் விட்டுவிடுவேன்" என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X