திரிஷாவின் மும்பை மோகம்

திரிஷாவை திரில்லர் திரிஷா என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு திரில்லிங் வேலைகளில் அவருக்கு நிறைய ஈடுபாடு உண்டு. சென்னையில் கிளப்களுக்குப் போவதிலும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கிளப்களில் பார்ட்டிகளுக்குப் போவதிலும் சற்றும் தயங்காமல் துணிச்சலுடன் கலாய்ப்பவர் திரிஷா.
அப்படிப்பட்டவருக்கு மும்பையின் அதி வேக வாழ்க்கை பிடிக்காமலா போய் விடும். கட்டா மீட்டா என்ற இந்திப் படத்தில் நடித்துள்ள திரிஷா தனது மும்பை வாழ்க்கை குறித்துக் கூறுகையில்,
மும்பை ஒருபோதும் தூங்குவதில்லை. மிக மிக பாதுகாப்பான நகரமும் கூட. நள்ளிரவில் கூட பயமின்றி உலவ முடிகிறது. தெருவோர உணவகங்களில் நிறைய சாப்பிட்டு அனுபவித்தேன்.
தனிப்பட்ட முறையில் எனக்கு மும்பையை நிறையப் பிடித்து விட்டது. இந்த கனவுகளின் நகரத்தில் நிறைய நேரத்தை செலவிட ஆசையாக உள்ளது என்றார்.
விரைவில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்திரீமேக்கில் திரிஷா நடிக்கவுள்ளார்.த ற்போது கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பு படத்தில் நடித்து வரும் திரிஷா அதை முடித்து விட்டு இந்தப் படத்துக்கு வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











