அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி

கலைஞானியின் புதல்வியான ஸ்ருதி, படு வேகமாக திரையுலகில் தனது பன்முகத் திறமைகளை வேரூண்றச் செய்து வருகிறார்.
இந்தியில் அவர் நடித்த லக், அவருக்கு திருப்தியைத் தராவிட்டாலும் கூட அதைப் பற்றிக் கவலையே படாமல், தந்தையின் உன்னைப் போல் ஒருவன் படத்தின் இசையமைப்புக்குக் கிடைக்கப் போகும் ரிசல்ட்டுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்.
உண்மையில் நான் தமிழ்ப் படத்தில்தான் நடித்து அறிமுகமாக வேண்டும் என நினைத்தேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. பிறகுதான் லக் படம் கிடைத்தது.
பாலிவுட்டில் பிரகாசிக்க மும்பையிலேயே செட்டிலாகி நடிக்க வேண்டும் எனத் தெரிகிறது. மத்திய மும்பையில் ஒரு வீடு வாங்கும் யோசனையும் உள்ளது என்கிறார் ஸ்ருதி.
ஸ்ருதியுடன் சரிகா பேச மாட்டாராம். இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், நான் கெளதமி மேடத்துடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பதை அவர் விரும்பவில்லை. இதனால் கோபமாக இருக்கிறார். இதற்காக என்னிடம் பேசுவதைக் கூட தவிர்க்கிறார். ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
எனது வாழ்க்கையில் எனது தந்தைதான் மிகப் பெரிய ஆதரவு. எனக்கு எனது தந்தையின் முழு ஆதரவு, ஒத்துழைப்பு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு முழு உலகையும் கலக்க விரும்புகிறேன். எனக்கென்று எல்லைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அதை விட்டு ஒருபோதும் தாண்ட மாட்டேன் என்கிறார் தைரியத்துடன் ஸ்ருதி.
கீப் இட் அப் ஸ்ருதி..!


Click it and Unblock the Notifications











