தீபிகா, பி.ஏ. சோசியாலஜி!

By Staff

Deepika Padukone
பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா, சைடில் பி.ஏ சோசியாலஜி படித்து வருகிறாராம்.

மாடலிங்கில் புகுந்து புறப்பட்ட தீபிகாவைத் தேடி ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் வந்து அவருக்கு பாலிவுட்டில் கதவை பெரிதாக திறந்து விட்டு விட்டது. இதனால் இப்போது பாலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின்களில் தீபிகாவும் ஒருவர்.

அதேசமயம், ஓம் சாந்தி ஓம் படத்தில் நடிக்க வருவதற்கு சற்று முன்புதான் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ சோசியாலஜி சேர்ந்திருந்தார் தீபிகா.

இன்னும் அந்தப் படிப்பை தீபிகா முடிக்கவில்லையாம். திரைப்படங்களில் பிசியாகி விட்டதால் படிப்பை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறாராம். சினிமாவில்தான் பிசியாகி விட்டோமே என்று படிப்பை விடவும் அவர் தயாராக இல்லை. காரணம், படிப்புதான் அனைத்தையும் விட முக்கியம் என்கிறார்.

பி.ஏ.வில் முதலாண்டை வெற்றிகரமாக முடித்து விட்ட தீபிகா, தற்போது 2வது ஆண்டில் அரியர் வைத்துள்ளாராம். ஆனால் எப்படியாவது படித்து முடித்து டிகிரி வாங்காமல் விட மாட்டேன் என்கிறார் உறுதியாக.

2011 வரை தீபிகாவுக்குப் படிப்பை முடிக்க அவகாசம் இருக்கிறதாம்.

இயக்குநர்களே தீபிகாவை கொஞ்சம் படிக்கவும் விடுங்களேன்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X