என் காட்சிகளை குறைத்தனர்-திவ்யா

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
வாரணம் ஆயிரம் படத்தில் பல சவால்களைத் தாண்டித்தான் என் பெயர் இந்த அளவு பிரபலமடைந்துள்ளது.
உண்மையில் அந்தப் படத்தில் இப்போது நீங்கள் பார்ப்பதை விட அதிக காட்சிகளில் நடித்திருந்தேன். ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை வெட்டி விட்டார்கள். அதையும் தாண்டிதான் எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக வேறு கேள்விகளுக்கு இனி பதில் அளிக்க மாட்டேன். நான் ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால் அதை ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள்.
என் வாழ்வில் பல முறை கடுமையான கட்டங்களை கடந்திருக்கிறேன். விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க கேட்டு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். என்னை கவனிப்பதைவிட நான் நடிக்கும் படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.
கதையே கேட்காமல் நட்புக்காகவும். மரியாதைக்காகவும் ஒப்புக்கொண்ட சில படங்கள் தோல்வியாக அமைந்தன. அதைப்பற்றித்தான் பலர் பேசுகிறார்கள். ஆனால் நான் நடித்த பெரிய ஹிட் படமான பொல்லாதவன் பற்றிப் பேச மறுக்கிறார்கள்.
மற்ற நடிகைகள் போல் நீங்களும் சம்பளத்தை உயர்த்துவீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கு தேவையான சம்பளத்தை மட்டுமே வாங்குகிறேன். அதுவே போதும். இனி வரும் படங்களில், என்னை கவரும் வேடமாக மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதை கவரும் வேடங்களாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார் ரம்யா.


Click it and Unblock the Notifications











