பிறந்த நாள்: ஜெனிலியா குதூகலம்!

காரணம், இந்த ஆண்டு அவர் நடித்து வெளியான இரண்டு படங்களுமே மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளன.
தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம், இந்தியில் ஜானே து ய ஜானே ந இரண்டும் அவரை ஒரு சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியுள்ளன.
இதனால் இன்றைக்கு இந்திய அளவில் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்த வண்ணமுள்ளன.
இதுகுறித்து ஜெனிலியா இப்படிக் கூறுகிறார்:
பாலிவுட்டில் இவ்வளவு பெரிய வெற்றி நான் எதிர்பார்க்காதது. இப்போதுதான் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது புரிகிறது. இனி தேர்ந்தெடுத்து நல்ல கதைகளை மட்டுமே ஒப்புக் கொள்ளப் போகிறேன். தமிழில் இரண்டு படங்களும், இந்தி மற்றும் தெலுங்கில் தலா மூன்று படங்களும் நான் எதிரிபார்த்த மாதிரி அருமையான கதைகளுடன் வந்துள்ளன. நிஜமாகவே இந்த ஆண்டு ஹாப்பி பர்த் டேதான்! என்கிறார்.


Click it and Unblock the Notifications











