முழுக்கு போடுகிறார் கோபிகா!!

By Staff

Gopika
ஒரு வழியாக நடிப்புக்கு முழுக்குப் போடுகிறார் கோபிகா. இனிமேல் மலையாளம் உள்பட எந்த மொழிப் படத்திலும் அவர் நடிக்க மாட்டாராம். வெள்ளித்திரைதான் அவருக்கு தமிழில் கடைசிப் படமாம்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கோபிகா, சேரனின் கண்டுபிடிப்பு. ஆட்டோகிராப் மூலம் நடிகையான கோபிகா, அதன் பின்னர் தமிழிலும், மலையாளத்திலும் மளமளவென வளர்ந்து முன்னணி நடிகையானவர்.

சமீப காலமாக அவர் தமிழை விட மலையாளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கோபிகா நடிப்புக்கு முழுக்குப் போடுகிறார். அவருக்கு கல்யாணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனராம்.

இதற்காக மலையாளத்திலேயே நல்ல மாப்பிள்ளையாக தேடிக் கொண்டுள்ளனராம். ஆனால் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக சில ஏடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கோபிகாவின் பெற்றோரிடம் கேட்டபோது, மாப்பிள்ளை பார்ப்பது உண்மைதான். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக சில இதழ்களில் வந்துள்ள செய்தி உண்மை இல்லை. அது முற்றிலும் தவறானதாகும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் கோபிகாவுக்கு திருமணமாகி விடும். வெள்ளித்திரைதான் தமிழில் அவர் நடித்துள்ள கடைசிப் படம். இதற்கு மேல் தமிழில் அவர் புதிய படங்களை ஒப்புக் கொள்ள மாட்டார். அதேபோல மலையாளத்தில் தற்போது 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவையும் முடியும் தருவாயில் உள்ளன. அதன் பிறகு நடிக்க மாட்டார்.

சமீபத்தில் ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ் படம் கூட கோபிகாவைத் தேடி வந்தது. ஆனால் வேண்டாம் என்று சொல்லி விட்டோம் என்றனர்.

ஏற்கனவே கோபிகா நடிப்புக்கு முழுக்குப் போடும் எண்ணத்தில் இருப்பதை நாம் கூறியிருந்தோம். கோபிகாவின் பெற்றோர் இப்போது அதை உறுதி செய்துள்ளனர்.

7ம் தேதி வெள்ளிக்கிழமை கோபிகா சென்னைக்கு வருகிறார். அன்று சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடக்கும் வெள்ளித்திரை படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X