'ஐட்டம்' வெறுக்கும் நிலா

தோஸ்த் சிம்பு கேட்டுக் கொண்டாரே என்பதற்காக காளை படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டார் நிலா. அது இப்போது வினையாகி விட்டது. நிலாவைத் தேடி நிறைய குத்துப் பாட்டுக்கள்தான் வந்து கொண்டிருக்கிறதாம்.
இதென்ன வம்பாப் போச்சே என்று கடுப்பான நிலா, வருகிறவர்களிடம்
எல்லாம், ஜி, நான் ஐட்டம் பாட்டுக்கு ஆடும் பெண் இல்ைல. ஹீரோயின். ஒரு படத்தில் ஆடினால் உடனே வந்து விடுவதா என்று புலம்பாத குறையாக குமுறுகிறாராம்.
நான் ஒரு படத்தில் நடித்தாலும் பேசும்படியான படமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்கிறார் நிலா.
தற்போது தெலுங்கில் அவரது கையில் ஒரு படம் இருக்கிறதாம். தமிழில் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம். நல்ல படம் கிடைக்கும் வரை ஆர்யாவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாராம்.
நன்னா இருக்கட்டும்!
Comments


Click it and Unblock the Notifications