கலைத் தாகத்தில் ஜோதிர்மயி!

By Staff

Jyothirmayi
படங்களில் நடிப்பதை விட வெளிநாடுகளில் 'கலைச்சேவை' செய்வதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது என்கிறார் நடிகை ஜோதிர்மயி.

பொதுவாகவே நடிகைகளின் திரை வாழ்க்கை ஆயுள் குறைவு. எனவே நடிப்பு போக, கிடைக்கிற மற்ற வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் அவர்களுக்கு.

பெரும்பாலும் இவர்கள் விரும்பிச் செல்வது வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளுக்குத்தான். அங்கு டாலர்களில் சன்மானம் குவிவதால், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடிகிறது.

திரையுலகில் வாய்ப்புக் குறைந்த அல்லது திருமணமான பல நடிகைகளின் முழுநேர தொழிலே இப்போது கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுதான்.

இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்துள்ளவர் மலையாள நடிகை ஜோதிர்மயி.

தலைநகரம், பெரியார், நான் அவனில்லை என பெயர் சொல்லும் படங்கள் சிலவற்றில் நடித்திருந்தாலும், தனக்குத் திருமணமாகிவிட்டது என இவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதிலிருந்தே இவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டன. ஆனாலும் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், அவருக்கு வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சி வாய்ப்புகள் வர, அதை சரியாகப் பயன்படுத்தி வருகிறார் ஜோதிர்மயி.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

சினிமாவில் நடிப்பதை விட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுதான் எனக்கு பிடிக்கிறது. காரணம், ரசிகர்களின் கரகோஷத்தை நேரடியாகக் கேட்கலாம். அவர்களின் அன்பையும் பெறலாம்.

கடந்த மாதம் இங்கிலாந்து, இத்தாலி, ஆஸ்திரியா, அயர்லாந்து, ஜெர்மனி, சுவிஸ் நாடுகளுக்குச் சென்றோம். மோகன்லால், முகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் வந்திருந்தார்கள். 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம்.

வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களும், மலையாளிகளும் எங்களை சொந்த உறவினர்கள்போல வரவேற்றார்கள். எங்களைப் போன்ற கலைஞர்களை பார்க்கும்போது சொந்த மண்ணைப் பார்ப்பது போல உணர்வதாகச் சொல்கிறார்கள்.

பார்ப்பவர்கள் எல்லாம் எங்கள் வீட்டுக்கு சாப்பிட வாருங்கள் என்று அழைத்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத மாதமாக இது அமைந்துவிட்டது என்கிறார் ஜோதிர்மயி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X