கமலின் 'மர்மயோகி'யில் கஜோல்?

வழக்கமாக பெரிய நடிகர்களும், இயக்குநர்களும் ஒரு படத்தை முடித்து விட்டால், சிறிது பிரேக் எடுத்துக் கொண்டு, ஓய்வுக்குப் பின்னர் அடுத்த படத்திற்குப் போவது வழக்கம். ஆனால் கமல் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
தசாவதாரம் படத்தை முடித்த கையோடு தனது மர்ம யோகி படத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி விட்டார் கமல். வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் கமல்.
மர்ம யோகி படத்துக்கான பூர்வாங்கப் தற்போது படு தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றனவாம். படத்தின் முக்கிய கேரக்டர்களுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்து வருகிறார் கமல்.
இப்படத்தில் கமல்ஹாசனுடன் ஹேமமாலினி நடிக்கவுள்ளார். ஹேராம் படம்தான் இருவரும் முதன் முதலில் இணைந்த படம். அதில் கமல்ஹாசனின் மாமியாராக நடித்திருந்தார் ஹேமா. இப்போது மர்மயோகியிலும் நடிக்கவுள்ளார்.
அதேபோல படத்தில் கஜோலையும் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் கமல். இதற்காக கஜோலை அணுகியுள்ளாராம் கமல். ஏற்கனவே இந்தியில் வெளியான அவ்வை சண்முகியின் ரீமேக் ஆன சாச்சி 420 படத்திற்காகவும் கஜோலை அணுகினார் கமல். ஆனால் அப்போது கஜோல் படு பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய் விட்டது.
ஆனல் தற்போது மர்மயோகியில் கஜோல் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது. பல கோடி செலவில் தயாரிக்கப்படவுள்ள மர்மயோகியில் நடிக்க கஜோல் தரப்பிலிருந்து பாசிட்டிவான அறிகுறிகள் தென்படுகிறதாம்.


Click it and Unblock the Notifications











