கமல் கூப்பிடறார்!! - ஸ்ரேயா

அசோக் அமிர்தராஜ் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் தன் போர்ஷனை முடித்துக் கொடுத்த கையோடு, ஜக்குபாயில் சரத் மகளாக நடிக்க சென்னை வந்துவிட்டார் ஸ்ரேயா.
தனது வெளிநாட்டுப் பட அனுபவம் குறித்து அவர் கூறியது: அமிர்தராஜ் படத்தில், கால் சென்டரில் வேலை பார்க்கும் வெளிநாட்டுப் பெண் வேடம் எனக்கு. ரொம்ப இனிமையான வேடம். வெளிநாட்டு இளைஞர் ஒருவருடன் தொலைபேசியிலேயே எனக்கு காதல் மலர்வதும், அதன் பின் விளைவுகளும்தான் இந்தப்படம்.
இந்தப் படம் முடிந்துவிட்டது. அடுத்து சரத் சார் மகளாக ஜக்குபாயில் நடிக்கிறேன். தந்தை மகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் இந்தப் படம். இப்படி எல்லாமே வித்தியாசமான பாத்திரங்களாக வந்துகொண்டிருக்கையில், இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அதுதான் மர்மயோகியில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு.
கமல் சாரே போன் செய்து என்னிடம் மர்மயோகியில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நல்ல வேடம். பேச்சு நடக்கிறது. மற்ற விவரங்கள் முடிவானதும் அறிவிக்கிறேன், என்றார் ஸ்ரேயா.
உதடுகள் பத்திரம்... முடிஞ்சா இன்ஷ்யூர் பண்ணிடுங்க அம்மணி!!


Click it and Unblock the Notifications











