ஆவி அமுதா தொடர்ந்த வழக்கு – சைதை கோர்ட்டில் கனகா ஆஜர்

ஆவி அமுதா அடியாட்களை வைத்து தொலைப்பேசி மூலம் தன்னை மிரட்டுவதாக சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் நடிகை கனகா புகார் கொடுத்தார். அவருடைய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தன் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார் என்று கூறி கனகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவி அமுதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கனகாவுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று கனகா நேரில் ஆஜரானார்.
ஏற்கனவே, கனகாவை மிரட்டிய வழக்கில் ஆவி அமுதாவுக்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது நினைவிருக்கலாம்.
தனது காதல் கணவரை ஆவி அமுதா தட்டிப் பறித்துக் கொண்டார் என்று கனகா புகார் கூறியதைத் தொடர்ந்தே சர்ச்சை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
aavi amutha அவதூறு வழக்கு ஆவி அமுதா கனகா சென்னை சைதாப்பேட்டை கோர்ட் chennai defamation case kanaka saidapet court


Click it and Unblock the Notifications