ரஞ்சிதாவை விசாரணைக்கு வரவழைக்க நடிகர் சங்க உதவியை நாடும் கர்நாடக போலீஸ்

By Sudha

Ranjitha
பெங்களூர் : நடிகை ரஞ்சிதாவை விசாரணைக்கு வரவழைக்க கடுமையாக போராடி வரும் கர்நாடக சிஐடி போலீஸார், ரஞ்சிதாவை வரவழைக்க நடிகர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளதாம்.

நித்தியானந்தாவுடன் ஆபாச கோலத்தில் நடிகை ரஞ்சிதா இருந்த வீடியோ வெளியாகி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில்,கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த நித்தியானந்தாவை கர்நாடக போலீஸ் படை பிடித்து பெங்களூர் கொண்டு வந்தது.

ஆனால் ரஞ்சிதா மட்டும் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இடையில் நித்தியானந்தா மூலம் ரஞ்சிதாவின் தொலைபேசி எண்ணைப் பெற்ற கர்நாடக சிஐடி போலீஸார், அவரிடம் பேசினர்.

அதற்கு ரஞ்சிதா, விசாரணைக்கு தானே நேரில் வருவதாகவும், இரவில் மட்டும் விசாரணையை மேற்கொள்ளுமாறும், ரகசியமாக இதை வைத்துக் கொள்ளுமாறும் கூறியதாக செய்திகள் கூறின.

ஆனால் இதுவரை ரஞ்சிதா வரவில்லை. வாக்குமூலமும் தரவில்லை. தற்போது விசாரணைக்கு வருமாறு கூறி ரஞ்சிதாவுக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளது கர்நாடக சிஐடி போலீஸ். இதற்காக சென்னையில் உள்ள அவரின் வழக்கறிஞர் ஒருவரையும், நடிகர் சங்க நிர்வாகிகளையும் சில நாட்களுக்கு முன் சந்தித்து கர்நாடக சிஐடி போலீசார் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சங்கத்தினரும் ரஞ்சிதாவை தேடிக் கண்டுபிடித்து தொடர்பு கொண்டு விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X