'ஸ்பெஷல்' குழந்தைகளுடன் லக்ஷ்மி ராய் பர்த்டே பார்ட்டி

சென்னையில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான 'கருணை வில்லா' தொண்டு நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு மற்றும் சில பரிசுப் பொருட்களை வழங்கினார் ராய்.
இது பற்றி செய்தியாளர்களிடம் ராய் கூறுகையில், என் வாழ்க்கையில் முதன்முறையாக எனது பிறந்தநாளை அர்த்தமுள்ளவகையில் கொண்டாடி மகிழ்ந்தேன். மறக்கமுடியாத அனுபவம்.
இந்தாண்டு எதிர்பாராத பல இனிய அனுபவங்கள் கிடைத்தன. என் பெற்றோர் 19 பெரிய அழகிய பூக்களை பிறந்தநாள் பரிசாக கொடுத்தனர். இதே அன்போடு என் ரசிகர்களும் என்னை வாழ்த்துவார்கள் என நினைக்கின்றேன்.
எனது பள்ளிக்காலங்களில் இருந்தே ஏழைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்று நினைத்துவந்தேன். இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததில் சந்தோஷமாக உள்ளது.
இதுவரை நான் குறைந்த படங்களில்தான் நடித்துள்ளேன். அந்த பாத்திரங்களும் குறிப்பிடும்வகையில் இல்லை. ஆனால் இந்தாண்டு நான் நடிக்கும் படங்கள் நிச்சயம் மறக்கமுடியாதவையாக ரசிகர்களுக்கு அமையும்.
கல்லூரியில் படித்தபோது நிறைய பேர் என்னை காதலிப்பதாக கூறியுள்ளனர். காதலிப்பது ஒன்றும் பாவமில்லை. சினிமா வட்டாரத்தி்ல் யாரும் என்னிடம் இதுவரை ஐ லவ் யூ சொன்னதில்லை. நான் ஒரு ஈசி கேர்ள். இந்த காதல் அம்புகளையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றார்.
அப்படியே ஆகட்டும் லக்ஷ்மி!
இதோ onindia.in சார்பில் 'மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே'


Click it and Unblock the Notifications











