சினிமாவுக்கு முழுக்கா? - புலம்பும் மீனா

By Staff

{image-Meena_(1)250_05102008.jpg tamil.filmibeat.com}சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டார் என யாரோ சிலர் தன்னைப் பற்றி வதந்தியைக் கிளப்பி விட்டுவிட்டதாகப் புலம்புகிறார் மீனா.

மீனாவுக்கு கல்யாணம், மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என நீண்ட நாட்களாகவே பேசி வருகிறார்கள். ஆனால் மீனாவோ, இன்னும் நான் சின்னப் பெண்ணாக்கும், இப்போ என்ன அவசரம் எனப் பேட்டியளிப்பது வாடிக்கை.

ஆனாலும் 'இவன்' படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்கு சுத்தமாக வாய்ப்புகளே இல்லாமல் போக, நீண்ட நாள் மலையாளப் படவுலகம் பக்கம் ஒதுங்கிவிட்ட மீனாவை சமீபத்தில் ரஜினியின் குசேலனுக்காக தமிழுக்கு அழைத்து வந்தார்கள்.

ஆனால் இந்தப் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இப்போது விஜய்காந்துக்கு ஜோடியாக மரியாதை படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் மீனா.

இந்த நிலையில்தான் அவர் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகப் போகிறார் என செய்திகள் வர, டென்ஷனான மீனா இப்படிக் கூறுகிறார்:

சினிமாவிலிருந்து நான் ஒதுங்கி விடவில்லை. நடிப்புக்கு முழுக்கும் போடவில்லை. நல்ல கதாபாத்திரங்கள், வித்தியாசமான வேடங்கள் வந்தால் நடிக்கலாம் என்பதற்காகக் காத்திருக்கிறேன். ஆனால் படங்களின் எண்ணிக்கையை நானாகத்தான் குறைத்துக் கொண்டேன்.

எந்த முக்கியத்துவமும் இல்லாத வேடங்களில் நடிப்பதில் ஒரு பயனும் இல்லை. அதுபோல் வந்த எத்தனையோ வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறேன். வருடத்துக்கு ஒரு படம் நடித்தாலும் அதில் திருப்தி அடைவேன். டைரக்டர் விக்ரமன், விஜயகாந்த் இணையும் மரியாதை படத்தில் நான்தான் கதாநாயகி.

இந்தப் படத்துக்கு மட்டும் 3 மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். மலையாளம், தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவுக்கு முழுக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் மீனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X