சோனியாவை சந்தித்தார் நக்மா-தேர்தல் டிக்கெட் கேட்டார்

நடிகை நக்மாவுக்து தேர்தல் ஜூரம் தீவிரமாகியுள்ளது. எப்படியாவது காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
இந்த நிலையில், டெல்லி சென்ற நக்மா அங்கு சோனியா காந்தியையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்துள்ளார். அப்போது தேர்தலில் போட்டியிட தான் ஆர்வமாக இருப்பதாகவும், டிக்கெட் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வட மேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நக்மா இந்தத் தொகுதியைக் குறி வைத்திருப்பதற்கு காரணம் இங்கு பெரும்பாலும் இந்தி பேசுபவர்கள்தான் உள்ளனர். கிட்டத்தட்ட பாதிப்பேர் வடக்கிந்தியர்கள். மேலும், மும்பை திரையுலகின் பிரபலங்கள் பலரும் இப்பகுதியில்தான் வசிக்கின்றனர்.
எனவே எனக்கு வெற்றி நிச்சயம் என்று கூறும் நக்மா, தான் காங்கிரஸ் கட்சிக்காக கடந்த ஆறு வருடங்களாக பாடுபட்டு வருவதாகவும், சோனியாவிடம் தெரிவித்தாராம்.
இருப்பினும் சீட் உண்டா, இல்லையா என்பதை சோனியா காந்தி உறுதியாக தெரிவிக்கவில்லையாம். ஆனால் சீட் கிடைக்கும் என்ற பலத்த நம்பிக்கையில் உள்ளாராம் நக்மா.


Click it and Unblock the Notifications











