நமீதாவின் 'பிரமாண்டம்'!

By Staff

Namitha
நமீதா கன்னடத்தில் நடித்த நீல்கண்டா, தமிழில் பிரமாண்டம் என்ற பெயரில் டப் ஆகியுள்ளது. ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் தமிழில் டப் செய்ததால் அப்செட் ஆன நமீதா ஆடியோ வெளியீட்டு விழாவை புறக்கணித்து விட்டார்.

தமிழில் கலக்கிக் கொண்டிருக்கும் நமீதா 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் நடித்த படம்தான் நீல்கண்டா. தமிழைப் போலவே கன்னத்திலும் கண்ணை மூடிக்கொண்டு கிளாமரில் கிறங்கடித்திருந்தார்.

இப்படத்தை இப்போது தூசு தட்டி எடுத்து தமிழுக்குக் கொண்டு வந்துள்ளனர். பிரமாண்டம் என்று படத்துக்குப் பெயர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் நமீதா பங்கேற்கவில்லை. அதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. நீல்கண்டாவில் நமீதாவுக்கு ஜோடியாக நடித்தவர் ரவிச்சந்திரன். இப்படத்தை முதலில் டப் செய்யும் எண்ணம் இல்லையாம் தயாரிப்பாளருக்கு. அதைச் சொல்லித்தான் நமீதாவை புக் செய்தனராம். டப் செய்ய மாட்டார்கள் என்பதால், கன்னடத்திற்கான சம்பளத்தை மட்டும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டாராம் நமீதா.

இந்த நிலையில் திடீரென டப் செய்து வெளியிட முடிவு செய்ததால், நமீதா கடுப்பாகி விட்டாராம். தன்னை தயாரிப்பாளர் ஏமாற்றி விட்டார் என்ற கோபத்தில் இருக்கிறாராம். இதனால்தான் ஆடியோ விழாவுக்கு வரவில்லையாம் நமீதா.

விழாவில் இயக்குநர் பாரதிராஜா கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட்டார். முதல் கேசட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பெற்றுக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X